Header Ads

test

யாழில் போராட்டத்தில் குதித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

 நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதேவேளை, நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

No comments