Header Ads

test

கிளி - கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை.

 கிளிநொச்சி கண்டாவளை பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிளிநொச்சி கண்டாவளை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதுடன் அவரது விடுதிக்குச் சென்ற சிலரும் அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இதற்கான விசாரணைகள் தருமபுரம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்யும் பொருட்டு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது கடமையிலிருந்த ஏனையவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதுடன் சி.சி.ரி.வி கமரா ஒளிப்பதிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


No comments