Header Ads

test

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்த போராட்டம்.

 தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்த போராட்டம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது நேற்று (02-02-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில், ஏற்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளின் உரப்பிரச்சினை, பால்மா தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   

மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி, கலந்து கொண்டார்.

இந்த நிலையில் முன்னாள் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இபாஸ் நஸீர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகள் பிரதேச மக்கள் ஆகியோர் இந்த தீப்பந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.  

இதேவேளை, அரசாங்கத்து எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.  

No comments