Header Ads

test

மூன்று இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

 திருகோணமலையில் ஒரே முச்சக்கர வண்டி மூன்று இடங்களில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் அறுவர் படுகாயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகர பகுதியில் நேற்று (01) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை டொக்யார்ட் வீதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக நடந்து சென்ற ஒருவர் உடன் மோதி அங்கிருந்து தப்பிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி, மீண்டும் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்களில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருடன் மோதியதில் முச்சக்கர வண்டி கவிழ்ந்துள்ளது .

பின்னர் பொதுமக்களினால் முச்சக்கரவண்டி நிமிர்த்தி எடுக்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, திருகோணமலை பிரதான வீதியில் மின் கம்பம் ஒன்றுடன் மோதிய நிலையில் பொதுமக்களினால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

இவ் விபத்தில் படுகாயமடைந்த அறுவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments