Header Ads

test

புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

 புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுத்துறை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் பெயர் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுத்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments