முல்லைத்தீவில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு.
முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கணேஸ்வீதி தேவிபுரம் பகுதியில் வசித்து வரும் 38 அகவையுடைய ஆறுமுகம் பிரதீபன் என்ற குடும்பஸ்தர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக இவ்வாறான தவறான முடிவினை எடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment