முல்லைத்தீவில் வாழப் பிடிக்காததால் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை.
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 27 அகவையுடைய துரை றொபின்சா என்ற யுவதியே இவ்வாறு தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லீசிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த யுவதிக்கு தனக்கு வாழபிடிக்கவில்லை என மன விரக்தியில் கடிதம் ஒன்றினை எழுதி உடமையில் வைத்துவிட்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment