உலக சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்.
இலங்கையின் நுவரெலியா - கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
மிக இளவயதில் உலக வரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணும் சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார்.
மிக இளவயதில் மிக வேகமாக உலக நாடுகளை அடையாளம் காணுவதில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். உலக வரைபடத்தின் அனைத்து நாடுகளையும் துல்லியமாக அடையாளம் காட்டி அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
எவ்வித அடையாளங்களோ அல்லது எந்தவிதமான எழுத்துக்களோ இல்லாத நிறங்களில் நாடுகள் அடையாளப்படுத்தப்பட்ட உலக வரைபடத்தில் லவ்னீஷ் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவ்வாறு உலக நாடுகளை அடையாளம் காட்டுவதற்காக லவ்னீஷ், 3 நிமிடங்கள் மற்றும் 16 செகன்ட்களை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தந்தை ஓர் கணனி போதனாசிரியர் என்பதுடன், தாய் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொட்டகலை பிரதேசத்தில் வசித்து வரும் லவ்னீஸ் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.
5 வயது 7 மாதங்கள் 27 நாட்களில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட போதிலும், உலக புத்தகத்தில் நேற்றைய தினமே இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது.
Post a Comment