Header Ads

test

கொடுரமாக பெண்களினால் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்த்தர்.

 கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்றதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களான பெண்கள் மற்றும் ஆண்கள், அயல் வீட்டில் குடியேற வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துனகஹா கிழக்கு, பள்ளியப்பிட்டியவைச் சேர்ந்த கே. வின்சன் எனப்படும் 68 வயதான கொத்தனார் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவி உயிரிழந்த பின்னர் இந்த நபர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயல் வீட்டில் வசிப்பவர் தனக்கு தொல்லை என கூறியமையினால் ஏற்பட்ட  முரண்பாட்டினை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை வின்சனின் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரை கொலை செய்த பின்னரும் வீட்டில் இருந்த மிளகாய் தூள் அவர் மீது கொட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்களின் வீட்டிற்கு யாரோ சிலர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments