Header Ads

test

முள்ளியவளை தண்ணீரூற்று பொதுசந்தை மீது தாக்குதல் - சந்தேக நபர்கள் மூவர் கைது.

 முள்ளியவளை - தண்ணீரூற்று பொதுசந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

தண்ணீரூற்று பொதுச்சந்தை மீது கடந்த 24ஆம் திகதி அன்று அதிகாலை நான்கு பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். 

இதன்போது சந்தையின் காவலாளியான 60 வயதுடைய நபர் காலில் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தையினை குத்தகைக்கு எடுத்தமை தொடர்பில் எழுந்த பிரச்சினையின் விளைவாக நள்ளிரவில் வந்த கும்பல் ஒன்று அரச சொத்தான பொது சந்தைக்கு சேதத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கீழ் உள்ள முள்ளியவளை உப அலுவலகத்திற்கு சொந்தமான பொது சந்தையே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முள்ளியவளை உப பிரதேச சபையின் பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார். இவர்கள் தாக்குதல் நடத்தியமை சி.சி.ரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் சந்தேக நபர்களை இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


No comments