யாழில் வாந்தி எடுத்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.
யாழ்.தென்மராட்சி - மந்துவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சத்தியராஜ் ஜானுசன் (வயது9) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
கோவிலுக்குச் சென்று வந்த குறித்த சிறுவன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளான்.
இதனையடுத்து பெற்றோர் குறித்த சிறுவனை சாவகச்சோி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment