கொழும்பில் தலை இல்லாது மீட்கப்பட்ட சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.
கொழும்பு – வெள்ளவத்தை கடலில் தலையில்லா சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை இல்லாது காணப்படும் இந்த சடலம், முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment