Header Ads

test

மஹரகமவில் காணாமல் போன சிறுமி தொடர்பில் கிடைத்துள்ள முக்கிய தகவல்.

 இந்த வருடம் (2022) ஜனவரி மாதம் 7-01-2022 ஆம் திகதி மஹரகம பிரதேசத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி வீடு திரும்பியுள்ளதாக சிறுமியின் தாயார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (12) குறித்த சிறுமி வீடு திருப்பியுள்ளார்.

மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மஹரகம பொலிஸ் விசேட குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11-01-2022) சிறுமியின் படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க பொது உதவியை நாடினர்.

மேலும், சிறுமியின் தாயார் மஹரகம OIC யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து தனது மகள் தமக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதன் பின்னர் வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.


No comments