இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் காதலர்கள் பலி.
பண்டாரகமயில் நடந்த கோர விபத்தில் இளம் காதலர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்தில் இன்று காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
கெஸ்பேவயில் இருந்து பண்டாரகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஆணும், கண்டி பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பெண்ணும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment