Header Ads

test

மாதகல் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய ஆணொருவரின் சடலம்.

 மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

குறித்த நபர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.

மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டும் நிலையில் கடற்படை அதனை மறுத்துள்ளனர்.




No comments