Header Ads

test

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.

 மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா இசை நடனக் கல்லூரியின் முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் நெல் அறுவடை செய்யும் உழவு இயந்திரத்தினை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதினாலேயே இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் மீது மோதி உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிளின் சாரதி மேல் ஏறியதில் சாரதி இடத்திலேயே தலை நசுங்கிப் பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவிய நிலையில் காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உழவு இயந்திர சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




No comments