டிப்பர் ரக வாகனம் மோதி நபரொருவர் பரிதாபரமாக பலி.
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 76 வயதான சாஹுல் ஹமீட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெடித்த பாறைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ட்ரக், களிமண் மண்ணை தரையில் கொட்டுவதற்காக பின்னோக்கி தள்ளப்பட்ட போது டயரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை தடுத்து வைத்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ள நிலையில் கந்தளாய் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment