Header Ads

test

யாழில் ATM இயந்திரத்தில் பல இலட்சம் ரூபா திருட்டு.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரைப் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வங்கியின் ATM இயந்திரத்தில் இருந்து 7,50,000 ரூபா பணம் களவாடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் சந்தேகநபரை அடையாளம் கண்டதுடன் குறித்த நபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் , சுழிபுரம் மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என கூறப்படும் அதேவேளை , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments