குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
60 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
குறித்த பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment