பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள 48 மணி நேர காலக்கெடு.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அதன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL)பின்வரும் தகவல்களைக் கோரியுள்ளது.
கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்ட இடம் மற்றும் கைது செய்யப்பட்ட நேரம் பற்றி 48 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) தெரிவிக்கவும்.
கைதிகளை விடுவிப்பது அல்லது பிற தடுப்புக்காவல் இடங்களுக்கு மாற்றுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment