Header Ads

test

Laugfs எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

 டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள ஏற்க Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என Laugfs எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி பொது மக்கள் Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments