யாழில் மேற்கொள்ளப்படவிருந்த மின்னுற்பத்தி நிலைய திட்டத்தை கைவிட்ட சீனா.
யாழ்.கடற்கரை பகுதியில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க இலங்கையுடன், சீனா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் குறித்த மின் உற்பத்தி திட்டத்தை சீன நிறுவனம் தற்போது இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை இலங்கையில் உள்ள சீன தூதரத்தின் சமூகவலைளத்தளத்தில் பதிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை, Sino Soar Hybrid Technology நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்தமை தொடர்பில் இந்தியா கடும் அச்சம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment