யாழில் இடம்பெற விருந்த பாரிய அசம்பாவிதம் தவிர்கப்பட்டது எப்படி.
யாழில் உள்ள வீடொன்றிற்குள் நுழைய ஜன்னல் கம்பிகளை வளைத்துக் கொண்டிருந்த திருடனை அவதனித்த வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டதால் குறித்த திருடன் பதறியடித்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன் தினம் (20) யாழ்.கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மணல்தறை ஒழுங்கையில் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஓர் வீட்டில் இரவு வேளையில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து உட்புகுந்த திருடர்கள் அந்த அறையில் இருந்து ஏனைய அறைகளிற்கு செல்வதற்காக மற்றுமோர் ஜன்னலை வளைக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டாவது ஜன்னல்களை வளைக்கும் முயற்சியின்போது ஏற்பட்ட சத்தம் காரணமாக வீட்டார் விழித்து மின் விளக்குகளை ஒளிர விட்டபோது திருடர்கள் ஓடித் தப்பிவிட்டனர். இதன் காரணமாக குறித்த வீட்டில் இடம்பெறவிருந்த பெரும் களவு தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment