கொழும்பில் ஏற்பட்ட திடீர் பரபரப்பால் அதிர்ச்சியில் மக்கள்.
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் துப்பாக்கியால் சுட்டு, கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து சென்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொள்ளையர்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment