வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழை அணைக்குமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்துதல்.
வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன (Sulaksana Jeyawardana) இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக மின் விநியோகத்தை மேற்கொள்வது எமது பொறுப்பாகும்
எவ்வாறாயினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்த நாம் முயற்சித்து வருகிறோம்.
மிக முக்கியமாக, மின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாகவும், உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும்.
வீடு ஒன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்க முடிந்தால் நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் மின் குமிழ்களை அணைக்க முடியும்.
மின்சாரத்தை சேமிப்பது என்பது குறுகிய காலத்தில் செய்ய வேண்டிய ஒன்றல்ல. இது ஒரு பழக்கமாக, நம் வாழ்வின் ஒரு பகுதியாக, நாம் செய்ய வேண்டிய ஒன்று என தெரிவித்தார்.
Post a Comment