தேங்காயால் தாக்கிய கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி.
தேங்காயால் தன்னை தாக்கிய கணவரை கழுத்தில் கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரணால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பதியினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மனைவியால் கணவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்த கணவன், மனைவியின் தலையில் தேங்காயால் அடித்துள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஆத்திரமடைந்த மனைவியின் கையில் இருந்த கத்தி அவரது கணவரின் கழுத்தில் தாக்கியது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக மொரகெட்டிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment