ஈழத் தமிழர்களிற்கு விடுதலை என்றால் பாரத தேசத்தின் அரவணைப்பிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது -நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிப்பு.
பாரத தேசத்தின் நம்பிக்கையினையும், அழுத்தத்தினையும் தமிழ் நாட்டிலே பிறந்த ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழிச்சிக்கும் இருக்கின்ற கடமையிலேயே ஈழத்து மண்ணின் எதிர் காலம் தங்கியிருக்கின்றது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் வன்னியரசின் தந்தை இரத்தினசாமியின் நினைவு நாளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாங்கள் இன்று நிலம் அற்றவர்களாகவும், மொழி அற்றவர்களாகவும் இருக்கின்றோம். அதாவது எமது மொழி பறிக்கப்படுகின்றது.
எமது நிலம் பறிக்கப்படுகின்றது நாம் வாழ்ந்த வரலாறு பறிக்கப்படுகின்றது அதற்கும் மேலாக வாழும் உரிமையைக்கூட இழந்துகொண்டு இருக்கின்றோம் இவ்வளவு நெருக்கடிக்கும் மத்தியிலேயே எமது மக்கள் வாழ்கின்றனர் .
ஈழத் தமிழர்களிற்கு ஒரு விடுதலை என்றால், ஈழத் தமிழர்கள் நிம்மதியான சுயாட்சி என்றால் பாரத தேசத்தின் அமைப்பிலும் பாரத தேசத்தின் அரவணைப்பிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது நாங்கள் எப்போதுமே இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல.
அல்லது பாரத தேசத்திற்கு எதிரானவர்கள் அல்ல, நாங்கள் இந்தியாவின் பாதுகாவலர்களாக இருக்கவே விரும்புகின்றோம்.
அந்நிய சக்திகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றால் அல்லது இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்த முனைந்தால் அதனை பாதுகாக்கின்ற சக்தியாக எப்போதும் ஈழத் தமிழர்கள் இருப்பார்கள். அதனால் தான் எங்கள் இருப்பும் உங்கள் பாதுகாப்பும் பிண்ணிப் பிணைந்த ஒன்று என மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment