இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய்த் தூளை கரைத்தூற்றி கொடுமைப் படுத்திய நபர் கைது.
இரு சிறுமிகளின் முகத்தில் மிளகாய்த் தூளை கரைத்து ஊற்றிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் மொனராகலை- ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டெமண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுமிகளின் தந்தை கைவிட்டுச்சென்ற நிலையில் சிறுமிகளின் தாய் கொழும்பில் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் 13 மற்றும் 9 வயது சிறுமிகள் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களை கொடுமைப்படுத்திய, அப்பிள்ளைகளின் மாமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவரையும் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில், அப் பிள்ளைகளின் தாயின் உடன்பிறந்த சகோதரனான 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சிறுமிகளை கடுமையாக தாக்கி, மிளகாய்த் தூளை கரைத்து முகத்தில் ஊற்றியுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment