Header Ads

test

யாழில் இடம்பெற்ற கோர விபத்து - உயிருக்கு போராடும் இளைஞன்.

 யாழில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (08) யாழ்.காங்கேசன்துறை வீதி சிவலிங்கப்புளியடி சந்தியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து சம்பவத்தின் போது கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவரே படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்.காங்கேசன்துறை வீதி சிவலிங்கப்புளியடி சந்தியில் மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டி என்பன ஒன்றன் பின் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்விபத்து தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


No comments