Header Ads

test

இலங்கை இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்.

 ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்குள் ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அலுவல்கள் அமைச்சின் செயலாளர் காமினி பண்டார, ஜப்பானிய தூதுவரை தலதா மாளிகையில் வரவேற்றார். பின்னர், தூதுவர் புனித சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் குறிப்பு எழுதி நினைவுப் பரிசையும் வழங்கினார்.

தலதா மாளிகையிலுள்ள சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தில் உள்ள ஜப்பானிய கண்காட்சிக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார். இதன்போது பேசிய அவர்,

இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் செயற்பட்டு வருகிறது. ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்குள் ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குகிறோம் என்றார். 


No comments