பெண்ணொருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த தந்தையும் மகளும்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வானின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு அரசடி,பார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் தந்தையும்,மகளும் இணைந்து பெண்னொருவரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன், அணிந்திருந்த நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதன்போது தந்தையும், மகளும் வீதியில் இரத்த கறையுடன் செல்வதை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் இருவரையும் துரத்திச்சென்று சோதனை செய்தபோது இரத்தம் தோய்ந்த நகைகளும் தோடுகளுடன் இரு காதுகளையும் பையொன்றில் இடப்பட்டுள்ளதை கண்டு இருவரையும் பிடித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment