யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கிய குடும்பஸ்த்தருக்கு நேர்ந்த துயரம்.
அம்பாறை - மஹஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகமுயாய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
போகமுயாய, மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
காட்டு யானைகளின் வருகையை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதையடுத்து சட்டவிரோதமாக மின் வேலியை அமைத்த பெண்ணொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் போகமுயாய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment