Header Ads

test

திருகோணமலையில் கடலில் நீராடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த துயரம்.

 திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. வாழைத்தோட்டம் கடலில் நான்கு சிறுவர்கள் குளிர்த்துக் கொண்டிருந்த நிலையில், இதில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்.

இதன்போது உயிர் தப்பிய மற்றைய சிறுவர்கள் உடனடியாக பிரதேச மக்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நீரில் மூழ்கிய சிறுவர்களைக் தேடியபோது அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தரம் 09 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய யோகேந்திரராசா லக்சன் தரம் 06 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய டினேஸ்காந்த் நிம்ரோசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


No comments