முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1757வது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, , குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, வேண்டும் நீதி வேண்டும், சர்வதேசமே பதில் சொல், மரண சான்றிதழும் வேண்டாம் நட்ட ஈடும் வேண்டாம் என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment