பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டையடுத்து அதிரடியாக எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள்.
காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து குறித்த காவல் நிலையத்தில் கடமையில் உள்ள அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களையும் இடம்மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அம்பாறை, திருக்கோவில் காவல் நிலையத்திலிருந்தே அங்கு கடமையாற்றிவரும் அனைத்து காவல்துறையினரையும் கட்டம் கட்டமாக இடமாற்றும் நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி இரவு, காவல்துறை சாஜன்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 காவல்துறையினர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவல்துறை சாஜன்ட், துப்பாக்கிகளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை அத்தியட்சகர் தலைமையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment