காணமால் போன இரு சிறுவர்களை மீட்க வலை வீசும் காவல்துறை.
கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பாண்டுராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காணாமல் போன சிறுவர்களின் உறவினர்களை விசாரித்த போது கடந்த 23ஆம் திகதி முதல் இருவரும் காணவில்லை என பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
மேலும், காணாமல் போன சிறுவர்கள் குறித்து கொட்டதெனியாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பமவத்தில் 10 வயதுடைய திஸாநாயக்க முதியன்சேலாகே கவீஷா சந்தகெலும் என்ற சிறுவனும், 12 வயதுடைய ஜயசேகர முதிலிகே அகில டெதுனு என்ற சிறுவனுமே காணாமல் போயுள்ளனர்.
Post a Comment