யாழில் மனதை உருக்கும் சம்பவம் - மனைவி இறந்து சில மணி நேரத்தில் கணவனும் உயிரிழப்பு.
வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி, சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம், யாழ் சாவகச்சேரி சரசாலை வடக்கில் இடம்பெற்றுள்ளது.
யாழ் சாவகச்சேரி சரசாலை பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய கதிரவேலு முருகேசர் அவரது மனைவியான 93 வயதுடைய முருகேசர் தங்கம்மா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத ஏக்கத்தில், மனைவி இறந்த சில மணிநேரத்தில் கணவனும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தம்பதியினரின் சடலங்கள் ஒன்றாகத் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment