வடக்கில் நாளை பல பகுதிகளில் மின்வெட்டு - வெளியானது விபரம்.
நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வடக்கின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை இந்த மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,
யாழ்.மாவட்டம்
கலைவாணி வீதி பந்திங் சென்டர், கோப்பாய் கல்வியியல் கல்லூரி, கோண்டாவில் நீர்வழங்கல்சபை, கோப்பாய் இராணுவ முகாம், இராஜேஸ்வரி மண்டபம், பல்கலைக்கழக விடுதி, கலைவாணி திருநெல்வேலி, கோண்டாவில் கிழக்கு, கிருஷ்ணன் கோவிலடி, பொற்பதி, புகையிரத நிலைய வீதிச் சந்தி, இராஜவீதிசந்தி, இராஜவீதி கோப்பாய், திருநெல்வேலி, வாமாஸ் விதி, சுப்பர்மடம் ஐஸ்தொழிற்சாலை, மந்திகை மருத்துவமனை, தொலைத்தொடர்பு நிலையம் மாலுசந்தி, இலகடி, இன்பருட்டி, காந்தியூர். மாலுசந்தி , மந்திகை அம்மன் கோவில், அல்வாய், நாவலடி, ஸ்ரீலங்கா பாடசா லையடி, வியாபாரிமூலை, திக்கம், தேவரையாளி வதிரி, மனோகரா, வதிரி அரசடி , கட்டைக்காடு 55ம்பிரிவு இராணுவ முகாம், ஆழியவளை, கட்டைக்காடு, கேவில், முள்ளி யான், உடுத்துறை, வத்திராயன், வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி முள்ளியான் இராணுவ முகாம், வெற் றிலைக்கேணி கடற்படைமுகாம் ஆகிய இடங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கும்.
முல்லைத்தீவு மாவட்டம்
வற்றாப்பளை இராணுவ முகாம் எரிபொருள் நிரப்புநிலையம், வற்றாப்பளை விசேட அதிரடிப்படை தலைமையகம், வற்றாப்பளை, கேப்பாப்பிலவு, முள்ளியவளை, பிலாக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும்,
வவுனியா மாவட்டம்
ஆச்சிபுரம், ஆசிக்குளம், எல் லப்பர்மருதங்குளம், எல்லப்பர்மருதங்குளம் கோவிலடி, கற்குளம் (சிதம்பரபுரம்). கூமரசங்குளம் மாதாகோவிலடி, மகாமயிலங்குளம், மதுரநகர் கல்நாட்டினகுளம், பெரிய கூமரசங்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய இடங்களிலும்,
மன்னார் மாவட்டம்
அச்சம்குளம், அடம்பன், அகத்தி முறிப்பு , அகத்திமுறிப்பு திட்டம், அளவக்கை, அளவக்கை சிறுகுளம் திட்டம், ஆண்டாங்குளம், அரிப்பு, அரிப்பு நீர் வழங்கல், ஆத்திமோட்டை, அறுகுக்குன்று நொச்சிக்கு ளம், ஆத்திக்குழி, ஆவணம் வஞ்சியங்குளம், செம்மண் தீவு, இலந்தைமோட்டை, எருவிட்டான். ஹனைஸ்நகர், இத்திக்கண்டல், கண்ணாட்டி, கரடிக்குழி, கறுக்காய்குளம், காயக்குழி திட்டம், கொக்குப்படையான், கொண்டச்சிதிட் டம்.
கொண்டச்சிநீர்வழங்கல்சபை, கொண்டச்சி சிங்கள கிராமம், கூழாங்குளம். கூழாங்குளம் திட்டம் (நாத்தகர்), குருவில், மடுக்கரை. மணல்குளம், மாந்தை சந்தி (திருக்கேதீஸ்வரம்கிராமம்), மறிச்சுக்கட்டி, மருதமடு,மாதோட்டம், மாவிலங்கேணி, மேதன்வெளி, மினுக்கன், முள்ளிக்குளம், முருங்கன், முருங்கன்பிட்டி, முசலி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment