காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.
பதுளை கோபோ பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர், நேற்று முன்தினம் காணாமல் போன நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பதுளை நகரில் உள்ள பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், பொலிஸார் மற்றும் பொதுமக்களால் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதியின் பாதணிகள் அடையாள அட்டை, அலைபேசி, புத்தகப்பை என்பன கோபோ தோட்டத்திலுள்ள குளத்துக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதே குளத்திலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவியின் சடலம் அவரது தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment