நாட்டில் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாக சில பகுதிகளில் 75 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையினால் தென் பகுதிகளில் முகில்கூட்டத்துடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலும், அனுராதபுர மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Post a Comment