Header Ads

test

வடக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்தால் எழுந்துள்ள பலத்த சர்ச்சை.

  வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரிக்கை விடுத்துள்ளமையானது கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது .

அண்மைய நாட்களில் மாதகல் போன்ற இடங்களில் அரச அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு பொது மக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் காணி அளவீடு நடவடிக்கைகள் தடுத்த நிறுத்தப்பட்டிருந்தது.

அது குறித்து வட மாகாண ஆளுநர் கூறுகையில்,

வடமாகாணத்தின், அபிவிருத்தி, பொருளாதார, சமூக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக அரச அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரச அதிகாரிகளின் செயற்பாட்டிற்கு பொது மக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் இடையூறுகள் விளைவிக்கப்பட்டுள்ளன. காணி அளவீடுகளை மேற்கொள்வதில் அவர்களுக்கு கரிசனைகள் காணப்படுமாயின் அதுபற்றி கலந்துரையாடல்களைச் செய்வதற்கு தான் எப்போதுமே தயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்

அவ்வாறிருக்கையில், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதானது பொருத்தமற்ற செயற்பாடெனவும் அவர் குறிப்பிட்டார். இவ்விதமான நிலைமைகள் தொடருமாக இருந்தால் வடமாகாணத்தின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் நிகழ்வுகளுக்கு ஆளுநர் ஆதரவு தெரிவித்ததுடன், அது தொடர்பில் எச்சரிக்கையும் விடுத்துள்ளமையானது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


No comments