மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாக தகவல்.
மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பதுளை மாவட்டம் மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.
இருப்பினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரை சேர்ந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து மஹியங்கனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போயுள்ள யுவதி ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது,
முதலில் யுவதியே ஆற்றில் குதித்ததாகவும் அதன் பின்னர் இளைஞனும் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார். குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment