அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.
அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் மீள கடமைக்கு அழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச துறைசார் ஊழியர்களையும் ஜனவரி 3ஆம் திகதி முதல் கடமைக்கு அழைப்பதற்கு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பவுள்ளது. இதேவேளை கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், அரசுத் துறை ஊழியர்களை அலுவலகத்துக்கு வரவழைக்கும் முறை யைத் தீர்மானிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு முன்னர் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment