வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழப்பு.
வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் மாத்தளை – அம்பகஸ் பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
மது போதையில் இருந்த, பொதி சுமக்கும் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறே, கைகலப்பாக மாறி ஒருவர் தாக்கியதில் மற்றயைவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தளை- சுதுகங்கையைச் சேர்ந்த 37 வயதான தினேஸ் குமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , தாக்குதலை மேற்கொண்ட மற்றைய நபர் மாத்தளை- விகாரை வீதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது, மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
Post a Comment