Header Ads

test

கிளிநொச்சியில் இளம் பெண்ணை கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி.

 கிளிநொச்சிப் பகுதியில் இளம்பெண்ணை டிப்பர் வாகனத்தில் கடத்தி சென்ற போது , குறித்த டிப்பர் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கடத்தப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கண்டாவளை புதுப்பாலம் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார் எனவும், கடத்தப்பட்ட 23 வயதான பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் படுகாயமடைந்துள்ள பெண்ணின் உறவினர் என தன்னை அறிமுக ப்படுத்திய நபர் தெரிவிக்கையில் , கண்டவாளை கரவெட்டித்திடல் பகுதியில் வசிக்கும் எனது உறவுக்கார பெண்ணை ,டிப்பர் வாகனத்தில் வந்த இருவர் கடத்தி சென்றனர்.

அதனை கண்ணுற்று நாம் டிப்பர் வாகனத்தை மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்ற போது, டிப்பர் வாகனம் வேகமாக சென்று பாலத்தடியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது என தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments