உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை வன்புணர்வு செய்த கொடூரம்.
இலங்கையில் வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 26ஆம் திகதி பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மாரவில பொலிஸ் பிரிவின், யத்தகலன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கிய நபர் ஒருவர் , இந்த கொடூர சம்பவத்தை செய்ததாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணம் செய்யாத குறித்த பெண் சுமார் இரண்டு ஏக்கர் காணியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வரும் நிலையில், அவரது எட்டு சகோதரர்கள் வெளியூர்களில் வசித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபர் வந்த நேரத்தில் தான் உறக்கத்திலிருந்ததாகவும், அந்த நபரை அடையாளம் காண முடியாமல் முகத்தை துணியால் மூடிக்கொண்டு பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட மூதாட்டி பொலிசாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment