Header Ads

test

யாழில் ஹயஸ் வாகனத்தால் பறி போன உயிர்.

 யாழ். உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் மிதிவண்டியில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சம்பவத்தில் 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஹயஸ் வாகனத்தின் சாரதியை மக்கள் நையப்புடைத்துள்ளனர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments