Header Ads

test

நாளை புனித நத்தார் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் யேசுநாதரின் சிலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

 நாளை (25) சனிக்கிழமை புனித நத்தார் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில் கற்பிட்டியில் யேசுநாதரின் சிலை மற்றும் சிலுவைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிட்டி கிறிஸ்தவ சவக்காலையில் நேற்று இரவு யேசுநாதரின் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு இன்று வருகை தந்த கற்பிட்டி காவல்துறையினரும், புத்தளம் தடயவியல் காவல்துறையினரும், கை ரேகை பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அத்துடன், மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சவக்காலை உள்ள பகுதியில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். காவல்துறையினர் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு சிலை மற்றும் சிலுவைகள் உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பிராந்திய பிரதி காவல்துறை மா அதிபரின் ஆலோசனையில் கற்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments