ஒன்றிணைந்த தொழிற் சங்க போராட்டம் நாளை.
நாடு முழுவதுமுள்ள அரச தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆதரவினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச் சங்கத்தின் தலைவர் க.விக்னேஸ்வரானந்தன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
நாடு முழுவதுமுள்ள அரச தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாளை ( 08.12.2021 ) மேற்கொள்ளவிருக்கும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கமாகிய நாமும் எமது ஆதரவினை வழங்குகின்றோம்.
நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு வடமாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாமும் ஒத்துழைப்பை நல்கி போராட்டத்தை வெற்றிபெற செய்வோம் என்று வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment