Header Ads

test

ஜனாதிபதி கோட்டாபய பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு.

 இலங்கையை பசுமை நாடாக மாற்றுவதற்கு தேவையான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு, பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம் ஒன்றை உருவாக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளார்.

மேலும் இந்த மையம் பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) அவர்களின் வழிகாட்டலின் கீழ்,  செயற்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை உர நிறுவனம்  மற்றும் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, தேசிய சேதனப் பசளை மற்றும் விநியோக நிறுவனமாகச் செயற்படுத்துதல், தரமான தின்ம மற்றும் திரவ சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவித்தல், உரிய நேரகாலத்துக்குள் விவசாயிகளுக்கு உரத்தை வழங்குதல், மாவட்ட ரீதியில் உரத் தேவையைப் பூர்த்தி செய்தல், நெல், சோளம் மற்றும் ஏனைய தானியங்கள்,மரக்கறி மற்றும் பழ உற்பத்திகளை மேம்படுத்தல், பசுமை விவசாயத்துக்கு பொருத்தமானதும் தரமானதுமான விதைகள் மற்றும் கன்றுகளை உருவாக்குவதை ஊக்குவித்தல், விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுடன் தொடர்புடைய உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ் மட்ட அதிகாரிகளை ஒன்றிணைத்தல், உணவுப் பயிர்களை விநியோகித்தல், சேதன உணவுப் பயன்பாடு தொடர்பாக சுகாதாரக் கல்வி மற்றும் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்ட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு இந்த மையம் முன்னுரிமை வழங்க வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், காலநிலை மாற்றங்களுக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை சமூகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்பும் இலங்கையின் நோக்கத்துக்காகப் பயணிக்கவென உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிகள் இரண்டுடன், அவசியமான தொடர்பாடல்களை மேற்கொள்வதும் இந்நிலையத்தின் கடமையாகும்.


No comments